News November 7, 2025
நெல்லை: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
Similar News
News November 7, 2025
நெல்லை: கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – எஸ்.பி

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ் பி சிலம்பரசன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை சகஜமாக நடைபெற்று வருகிறது. இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இத்தகைய செயல்களை தடுப்பதற்கு முதலில் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். எனவே கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
News November 7, 2025
நெல்லை முக்கிய ரயில் இன்று பகுதி தூரம் ரத்து

திருநெல்வேலி வழியாக பாலக்காடு – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில் கோவில்பட்டி ரயில் நிலைய யார்டு பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காட்டில் இருந்து விருதுநகர் வரை மட்டுமே இன்று இயக்கப்படும். மறு மார்க்கமாக திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் இன்று பிற்பகல் 3:20 மணிக்கு விருதுநகரில் இருந்து பாலக்காட்டிற்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் இன்று நெல்லை திருச்செந்தூருக்கு வராது.
News November 7, 2025
நெல்லை: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 இது முக்கியம்!

நெல்லை மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு:0462-2576265. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.


