News November 7, 2025
வேலூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா? இங்க போங்க!

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், மாற்றம், முகவரி மாற்றம், உதவி சார்ந்த சந்தேகங்கள், ரேஷன் கடைகள் குறித்து புகார் போன்றவைகளுக்கு நாளை(நவ.8) மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கவுள்ளது. இதில், அனைவரும் கலந்துகொண்டு பயனடையலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 7, 2025
வேலூர் மாணவர்களுக்கு GOOD NEWS!

ஊரக பகுதிகளில் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு அரசு தேர்வு இயக்கத்தால் ஊரக திறனாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான தேர்வு வருகிற நவ.29-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இன்று நவம்பர் 7-ம் தேதி வரை அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2,483 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
News November 7, 2025
வேலூரில் வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

வேலூர் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!
News November 7, 2025
வேலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

வேலூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)


