News April 19, 2024
முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வாக்களிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியது. திருவள்ளூர் வி.எம். நகரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி லதா உடன் வந்து வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தபோது வரிசையில் நின்று ஜனநாயக கடமையான தனது வாக்கினை பதிவு செய்தனர்.
Similar News
News November 19, 2025
மீஞ்சூர்: வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு, புதுந்கர், அங்காளம்மன் கோவில் 2ஆவது தெருவில் பள்ளம் பகுதியில் வசிப்பவர் பாண்டியன்(35). இவர் மீட்டின் முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 4 பேர் கொண்ட கும்பல், பாண்டியனை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடினர். இதுகுறித்த புகாரில் சூரைவேந்தன்(20), கோகுல்ராஜ்(19), யுவராஜ்(32) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News November 19, 2025
பராமரிப்பு பணிகள் காரணமாக 49 மின்சார ரயில்கள் ரத்து

திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வரும் 23-ந்தேதி காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் (EMU) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
News November 18, 2025
SIR. படிவங்களை நிரப்ப உதவி மையங்கள்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அவரவர் வாக்குசாவடியில் SIR., படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் முகாம் வரும் நவ. 19, 20 ஆகிய நாட்களில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.


