News November 7, 2025
தருமபுரி: வீடு புகுந்து தாக்குதல்!

தருமபுரி, பெரியாம்பட்டியில் முன் விரோதம் காரணமாக, மணிபாரதி என்பவரது இல்ல நிச்சயதார்த்த விழாவில், 2 பெண்கள் உள்பட 3 பேரை ஒரு கும்பல் தாக்கியது. இது தொடர்பாக மணிபாரதி அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார், அடிலம் பகுதி ஆனந்தன், மாதேஷ், மணிகண்டன், சிவக்குமார், காசன், ரஞ்சித், வேடியப்பன் ஆகிய 7 பேரை கைது செய்து காரிமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 7, 2025
தருமபுரி: சொந்த ஊரிலே அரசு வேலை!

சமூகநலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பல்நோக்கு உதவியாளர்(24×7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தினை dharmapuri.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
தொப்பூர்: லாரி மோதியதில் உடல் நசுங்கி ஒருவர் பலி!

நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில் (நவ.5) காலை 12 மணி அளவில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு பணியில் இருப்பவரின் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News November 7, 2025
தருமபுரியில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

தருமபுரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)


