News November 7, 2025
புதுவை: சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

மெகபூ பாஷா என்ற சட்டக் கல்லூரி மாணவர் கருவடிக்குப்பம் மெயின்ரோட்டில் தனது உறவினரின் சூப் கடையில் பகுதி நேர வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று சூப் கடைக்கு வந்த வைத்திக்குப்பம் கடவுள், தேவா, கண்ணன் ஆகியோர் பீப் பக்கோடா கேட்டனர். அதற்கு மெகபூ பாஷா சற்று காத்திருக்க கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மெகபூ பாஷாவை சரமாரியாக தாக்கினர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News February 4, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News February 4, 2026
புதுச்சேரி: 10th போதும் – அரசு வேலை

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
புதுச்சேரியில் தரம் குறைந்த மாத்திரைகளுக்கு தடை

புதுச்சேரியில் தரமற்ற இரண்டு வகை மாத்திரைகளை விற்பனை செய்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் திருபுவனைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில், மருந்து தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், புதுச்சேரி கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


