News November 7, 2025
மாதவிடாயின் போது குமட்டல் வருதா? இதோ தீர்வு

மாதவிடாய்க்கு முன் குமட்டல் உணர்வு ஏற்படுகிறதா? ஒரு பொருளை வைத்தே இதனை ஈஸியாக சரி செய்யலாம். காலையில் இஞ்சி டீ குடிப்பது இதற்கு சரியான தீர்வாக அமையும் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியே நடைபயிற்சி சென்று நல்ல காற்றை சுவாசிப்பதும் கூட குமட்டலை சமாளிக்க உதவியாக இருக்கும் என்கின்றனர். அனைத்து பெண்களுக்கும் SHARE THIS.
Similar News
News February 3, 2026
தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நள்ளிரவு முதல் பயண உடைமைக்களுக்கான புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வெளிநாட்டில் ஓராண்டுக்கு மேல் தங்கியிருந்து வசித்துவிட்டு வான்வழியாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ இந்தியா திரும்பும் பெண்கள் 40 கிராமும், ஆண்கள் 20 கிராமும் ஆபரண தங்கத்தை சுங்க வரியின்றி கொண்டுவர அனுமதிக்கப்படுவர். அதேபோல, ₹75,000 வரையிலான பொருள்களுக்கு சுங்க வரி கிடையாது.
News February 3, 2026
பிரபல தமிழ் பாடகியின் பரிதாப நிலை

‘ஈசன்’-ல் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா பாடல் மூலம் பிரபலமானவர் தஞ்சை செல்வி. 2 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சொல்லில் அடங்கா துயரங்களை சந்தித்து மீண்டு வந்திருந்தாலும், தற்போது வாய்ப்புகள் இன்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். வீட்டு வாடகை கூட கட்டமுடியாமல் சிரமப்படுவதாக கூறும் அவர், சிறு கட்சேரி வாய்ப்புகள் கிடைத்தால் பிழைப்பு நடத்திக் கொள்வேன் என உதவி கேட்டுள்ளார்.
News February 3, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் கட்.. ஏன் தெரியுமா?

உ.பி.,யில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 68,000-க்கும் அதிகமான அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி சொத்துகளை சேர்க்கும் ஊழியர்களை கண்டறியும் விதமாக அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செய்தியை SM-ல் பதிவிட்டு, தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடவடிக்கை எடுத்தால் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து?


