News November 7, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (நவ.07) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெரும் கறம்பக்குடி, நரங்கிப்பட்டு, தீத்தான்விடுதி, பிலாவிடுதி, கறம்பவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
புதுகை: அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர்-10 தேதி அன்று புதுகை மாவட்டத்திற்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை முன்னிட்டு கீரனூர் கல்லூரி பகுதியில் இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.ரகுபதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News November 7, 2025
புதுகை: நாயால் பறிபோன உயிர்

மீமிசலிலிருந்து செய்யானத்திற்கு நேற்று ஜான் பீட்டர் மற்றும் அவரது மனைவி நிர்மலா(48) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, மெய்யானம் மறவர் குடியிருப்பு சாலையில் நாய் குறுக்கே வந்ததில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நிர்மலாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
புதுகை: 12th போதும்! அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<


