News November 7, 2025
சிவகங்கை: 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள சௌந்தரநாயகி அம்மன் சந்நிதி அர்த்தமண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. பெரியய்யா வழங்கிய தகவலின் பேரில் முனைவர் வேலாயுதராஜா மற்றும் ராஜேந்திரன் ஆய்வு செய்து, அவை முறையே 36 மற்றும் 39 வரிகளை கொண்டதாக பதிவு செய்தனர்.
Similar News
News November 7, 2025
சிவகங்கை: மூதாட்டி தலையை கடித்து குதறிய நாய்

நெல்முடிக்கரையை சேர்ந்த சுந்தராம்பாள் என்பவர் கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார். அப்போது தெரு நாய் ஒன்று வீட்டுக்குள் சென்று அவரை கடித்து குதறியுள்ளது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தெருநாயை விரட்டி மூதாட்டியை திருப்புவனம் அரசுமருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் தற்போது அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மட்டும் சிவகங்கையில் 7 பேரை தெருநாய் கடித்துள்ளது.
News November 7, 2025
சிவகங்கை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

சிவகங்கை மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
News November 7, 2025
BREAKING சிவகங்கைக்கு அலர்ட் விடுத்த ஆய்வு மையம்

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் இன்று விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.


