News November 7, 2025

நெல்லை: வினாத்தாள் மாறியதால் தேர்வில் குழப்பம்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பி.காம் அரியர் தேர்வில் வினாத்தாள் குழப்பம் ஏற்பட்டது. 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ‘மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்’ தேர்வுக்கு பதில் தவறுதலாக ‘ரீடைல் மார்க்கெட்டிங்’ வினாத்தாள் வழங்கபட்டது. பின்னர் சரியான வினாத்தாள் தரபட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு நடந்தது. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கபட்டதாகவும் பல்கலை வட்டாரம் கூறியது.

Similar News

News November 7, 2025

நெல்லை: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 இது முக்கியம்!

image

நெல்லை மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு:0462-2576265. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.

News November 7, 2025

நெல்லை: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர்

image

விகேபுரம் அருகே செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த பால்பாண்டி மனைவி அமுதா நேற்று முன்தினம் இரவு 10.30மணிக்கு வீட்டின் முன்பக்கத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பைக்கில் தப்பி சென்றனர். இதுக்குறித்து பால்பாண்டி விகே புரம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

News November 7, 2025

நெல்லையில் ரயில் நிறுத்தும் நடைமேடை மாற்றம்

image

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க மற்றும் மேம்படுத்தும் பணிகள் காரணமாக, சில முக்கிய மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் நவம்பர் 29 வரை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் அனைத்தும் 5வது நடைமேடையில் நிறுத்தப்படும் என தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!