News November 7, 2025

சென்னையில் இன்று கரண்ட் கட்!

image

சென்னை, மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அம்பத்துார் பழனியப்பா, புதுார், ஏ.கே.அம்மன், பானு நகர், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், ஆலந்துார் எம்.கே.என்., சாலை, ஆஷர்கானா, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி., சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி-2 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்.

Similar News

News November 7, 2025

FLASH: சென்னை மெரினா பீச்சில் கொலை!

image

சென்னை மெரினா கடற்கரையில் இன்று (நவ.07) மக்கள் வழக்கம் போல நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி என தெரியவந்தது. மேலும், கொலையாளிகளை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

News November 7, 2025

சென்னையில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

சென்னை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News November 7, 2025

சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

image

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேனாம்பேட்டை மண்டலம், ஆர்.கே.சாலை & ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்கிறது. எனவே, நவ.9ம் தேதியன்று, காலை 10 மணி முதல் நவ.10 காலை 10 மணி வரை தேனாம்பேட்டை மண்டலம், கோடம்பாக்கம் மண்டலம், அடையாறு மண்டலம் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. <<18222652>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!