News November 7, 2025
Sports Roundup: ஜுரெல் சதத்தால் மீண்ட இந்தியா

*தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது பயிற்சி டெஸ்டில் ஜுரெல் 132 ரன்கள் குவிக்க இந்தியா A 255 ரன்களுக்கு ஆல் அவுட். *ஹாங்காங் 6’s தொடர் இன்று தொடங்குகிறது. *FIDE உலக கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா 3-வது சுற்றுக்கு தகுதி. *பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ODI-ல் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி. *டி20-ல் 8-வது முறையாக அக்ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
Similar News
News February 17, 2026
மூட்டு வலியா? இந்த சட்னி சாப்பிடுங்க..

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். யூரிக் அமிலப் பிரச்சனையில் இருந்து விடுபட நெல்லிக்காய் சட்னி உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பொடியாய் நறுக்கிய நெல்லிக்காயை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் போட்டு அரைத்து கொள்ளுங்கள். விரும்பினால் இதில் ஒரு ஸ்பூன் எள்ளையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு எப்போதும் போல தாளித்தால் சூப்பரான நெல்லிக்காய் சட்னி ரெடி.
News February 17, 2026
கொசுக்களுக்கு கொண்டாட்டம்; மக்களுக்கு திண்டாட்டம்: EPS

மக்களின் உடல்நிலையை பாதிக்கும் கொசு, தெருநாய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுவதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டமாகவும், மக்களுக்கு திண்டாட்டமாகவும் உள்ளதாக விமர்சித்த அவர், கொசுகளால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சாடியுள்ளார். கொசு ஒழிப்புப் பணிக்காக சென்னை மாநகராட்சி ஒதுக்கிய ₹16.40 கோடி எங்கே போனது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 17, 2026
வரலாற்றில் இன்று

1886- தமிழகத்தின் முதல் பெண் டாக்டர், முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்.
1979 – சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே எல்லைப் போர் தொடங்கியது.
1963 – கூடைப்பந்து ஜாம்பவன் மைக்கேல் ஜோர்டான் பிறந்தநாள்.
1985 – நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.
1996 – இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஆழிப்பேரலையால் 166 பேர் உயிரிழந்தனர்.
2000 – மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.


