News November 7, 2025

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா: டிரம்ப்

image

இந்தியாவுடனான வர்த்தக உறவு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் கூடுதல் வரி விதித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி அழைப்பின் பேரில் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.

Similar News

News November 7, 2025

Manchester-ஐ Monster-ஆக மாற்றிய திமுக: நயினார்

image

திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை <<18222861>>பெண் கடத்தல்<<>> சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் Manchester-ஐ, Monster-கள் உலா வரும் பகுதியாக மாற்றியதே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார். TN காவல்துறை, திமுகவின் ஏவல்துறையாக செயல்படக் கூடாது எனவும், இளம்பெண்ணை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News November 7, 2025

முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் மஸ்க்!

image

எலான் மஸ்க்குக்கு 1 ட்ரில்லியன் டாலரை (₹88 லட்சம் கோடி) ஊதியமாக வழங்க டெஸ்லாவின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் டெஸ்லா பங்குகளாக அவர் பெறுவார். இதன் மூலம், அவர் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக வாய்ப்புள்ளது. டெஸ்லா சந்தை மதிப்பில் $8.5 டிரில்லியனை அடைய வேண்டும் என இவருக்கு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

image

மார்பக, நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களுக்கு இந்த பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் நவ. 7-ம் தேதி இந்திய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இந்த நாளில், விழிப்புணர்வு மட்டுமின்றி, புற்றுநோயை எதிர்கொள்ளும் சமூக மனப்பாங்கை உருவாக்கும் ஒரு நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!