News November 7, 2025
இந்த 8 விஷயங்கள் இருந்தா நீங்களும் ஜெயிக்கலாம்

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது நமது முயற்சியாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் அமையும் என்பார்கள். கிடைக்கும் வாய்ப்பை வெற்றியாக மாற்ற இந்த 8 விஷயங்களை தினமும் கடைப்பிடியுங்க. ➤இலக்கில் தெளிவு / கவனம் ➤சுயவிமர்சனம் ➤பொறுமை ➤திட்டமிடுதல் ➤இடைவிடாத கற்றல் ➤பேச்சுத்திறன் ➤உடற்பயிற்சி ➤சரியான ஓய்வு. இதில் எவற்றை தொடர்ச்சியாக செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க
Similar News
News February 12, 2026
அதிமுகவுக்கு விஜய் ஒரு பொருட்டே அல்ல: EPS

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘ஆட்சியில் பங்கு’ குறித்த கேள்விக்கு, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று EPS பதிலளித்துள்ளார். விஜய் தொடர்பான கேள்விக்கு, சினிமாவில்தான் ஹீரோ, ஆனால் அரசியலில் கேள்விக்குறிதான். அதிமுகவுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு பொருட்டே அல்ல எனக் கூறிய அவர், எம்ஜிஆர் பெயரை சொல்லித்தான் அவர் (விஜய்) கட்சியே நடத்துகிறார் எனவும் விமர்சித்தார்.
News February 12, 2026
ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? அருண்ராஜ்

ஆட்சியில் பங்கு தரமாட்டோம் <<19108663>>முதல்வரால்<<>>, திமுக தனித்து போட்டியிடும் என்று சொல்ல முடியுமா என்று தவெகவின் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். CM ஸ்டாலின் இன்று அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால்தான் திமுகவுடையது, மீதி 3 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. கூட்டணி கட்சிகளை வெறும் ஒட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி அதிகாரப் பகிர்வு அளிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல் எனவும் விமர்சித்தார்.
News February 12, 2026
வந்தே மாதரம் உத்தரவை திரும்ப பெறுங்க:ஜவாஹிருல்லா

அரசு, பள்ளி நிகழ்ச்சிகளில் 1937-ல் நீக்கப்பட்ட வரிகளுடன் சேர்த்து வந்தே மாதரம் இசைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய கீதம் இசைக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் பாடலும் இசைக்கப்பட வேண்டும் என்பது பன்மைச் சமூக இயல்புக்கு நேர்மாறானது. தேசிய கீதத்தின் அரசியலமைப்பு மரபை சிதைக்கும் மத்திய அரசின் கட்டாய அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார்.


