News November 7, 2025

விஜயகாந்த் செய்த தவறை செய்ய மாட்டேன்: சீமான்

image

கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை, தான் நிச்சயம் செய்ய மாட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார். தனித்து நின்று 10 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த், கூட்டணி வைத்த பிறகே அது குறைந்ததாக அவர் கூறியுள்ளார். அரசியலில் மாற்று என்று கூறிவிட்டு அதே கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மாற்றம் ஏற்படாது என்றும், தனித்து நின்றே நாதக ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சீமான் பேசியுள்ளார்.

Similar News

News February 20, 2026

விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

வார விடுமுறையை முன்னிட்டு பள்ளி & கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நெரிசலின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாள்களுக்கு சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in-ல் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News February 20, 2026

இனி CIBIL ஸ்கோர் தேவையில்லை!

image

CIBIL ஸ்கோர் காரணமாக வங்கிகளில் புதிதாக லோனுக்கு விண்ணப்பிப்பவர்கள் கடன் வாங்குவது என்பது பெரும் போராட்டமாக உள்ளது. இந்நிலையில் AI அடிப்படையிலான கடன் மதிப்பெண் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் பெண்கள், சுய உதவிக்குழுக்கள், சிறு வணிகர்கள் & கிராம மக்களும் எளிதாக கடன் பெறலாம். வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்த முடியும் என நம்பப்படுகிறது.

News February 20, 2026

கொள்கை தலைவரை மறந்தாரா விஜய்?

image

தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் 65-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதேநாளில், அஞ்சலை அம்மாளின் தியாகத்தைப் போற்றி வணங்குவதாக அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போட்டோ வெளியானது. ஆனால், இன்று விஜய்யிடம் இருந்து இதுவரை எந்த பதிவும் வரவில்லை. இதனால் கொள்கை தலைவரையே விஜய் மறந்துவிட்டாரா என அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர்.

error: Content is protected !!