News November 7, 2025

இந்தியாவில் உலகத்தரத்திலான வங்கிகள்: நிதியமைச்சர்

image

கட்டமைப்பில் பெரிய, உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் இந்தியாவிற்கு தேவை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்காக வங்கிகள் மற்றும் RBI-யுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே தங்களது முதல் இலக்கு எனவும், கடந்த 10 ஆண்டுகளில் மூலதன செலவு 5 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

பாஜக மீது சாஃப்ட் கார்னர் காட்டும் விஜய்?

image

கரூர் துயருக்கு பிறகு BJP மீது விஜய் சாஃப்ட் கார்னர் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பரப்புரைகளில் பாசிசம் என BJP-ஐ விமர்சித்து வந்த விஜய், தற்போது பொதுக்குழுவில் அதே மாதிரி ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை என்கின்றனர். SIR-க்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தில் கூட EC-ஐ மட்டுமே சாடியுள்ளதால் ADMK-BJP கூட்டணிக்கு விஜய் அச்சாரம் போடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவிக்கின்றனர்.

News November 7, 2025

சென்னையில் அதிகரிக்கும் வீடுகள் விலை!

image

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு சதுர அடி அளவு ஒப்பீட்டில், 2024-ம் ஆண்டுக்கான ஜூலை-செப்டம்படர் (Q3) சராசரி விலையை விட, நடப்பாண்டு ஜூலை-செப்டம்பர் (Q3) விலை குறைந்தபட்சம் 7% அதிகரித்துள்ளது. முழு விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.

News November 7, 2025

அரசியல் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி

image

<<18215650>>அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான<<>> வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதி. அதேபோல், அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

error: Content is protected !!