News November 7, 2025

Cinema Roundup: ‘ஜனநாயகன்’ OTT உரிமம் ₹121 கோடி

image

*மகேஷ்பாபு – ராஜமௌலி இணையும் படத்தின் டைட்டில் வரும் 15-ம் தேதி வெளியாக உள்ளது. *‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ₹121 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல். *‘குட் பேட் அக்லி’-யில் இளையராஜா பாடல் பயன்படுத்திய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு. *‘அரசன்’ படத்தின் கதை தனக்கு தெரியும் என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

நவம்பர் 7: வரலாற்றில் இன்று

image

*1858-கல்வியாளர் பிபின் சந்திர பால் பிறந்தநாள். *1867–நோபல் பரிசு வென்ற மேரி கியூரின் பிறந்தநாள். *1888–நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் பிறந்தநாள். *1969–நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள். *1975–இயக்குநர் வெங்கட் பிரபு பிறந்தநாள். *1993 – திருமுருக கிருபானந்த வாரியார் மறைந்த நாள். *2000 – அரசியல்வாதி சி.சுப்பிரமணியம் மறைந்த நாள்.

News November 7, 2025

சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்பு

image

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய 26 பெண்கள் உள்பட 270 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மொத்தம் 465 இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்க நாளை விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு என அழைத்து செல்லப்பட்டு, சைபர் மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,500 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 7, 2025

விவேகானந்தர் பொன்மொழிகள்!

image

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. *வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

error: Content is protected !!