News November 7, 2025
கூகுள் மேப்பில் வருகிறது புது அம்சங்கள்

இந்திய பயனர்களுக்காக கூகுள் மேப்பில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. Gemini AI, விபத்து பகுதி, அதிகபட்ச வேக வரம்பு உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளன. குறிப்பாக Voice Interaction வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், வழியில் உணவகம் ஏதும் உள்ளதாக, அங்கு பார்க்கிங் எப்படி என வண்டி ஓட்டும் போது, நமது தேவைகளை அதனுடன் கலந்துரையாடி பெறலாம்.
Similar News
News February 2, 2026
‘மாம்பழம்’ யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை

பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் ECI பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்புமணிக்கு சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அன்புமணி தரப்புக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
News February 2, 2026
FLASH: நல்லகண்ணு மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதி

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். இவர் கடந்த சில மாதங்களாக வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
News February 2, 2026
OPS-ஐ TTV கழற்றிவிட இதுதான் காரணமா?

OPS-ஐ விட்டு TTV தினகரன் மட்டும் NDA கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேசப்பட்டது. ஆனால், கடைசி வரை OPS-ஐ இணைக்க TTV முயன்றாராம். முதலில் தனிக்கட்சி தொடங்கி NDA-ல் இணையும்படி OPS-யிடம் அவர் கூறியிருக்கிறார். அதனை OPS மறுக்க, அமமுகவில் சேர்த்து தேர்தலில் போட்டியிடவும் TTV பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ’EPS-யிடம் பேசுங்கள்’ என விடாபிடியாக இருந்ததால்தான் OPS-ஐ TTV கழற்றிவிட்டார் என்கின்றனர்.


