News April 19, 2024
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு என்பது பொய்

தமிழகத்தில் காலை முதல் அமைதியாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கிடையில் வட சென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு செல்வதாக ஒருவர் புகார் அளித்தார். இதனால், திமுக, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, புகார் அளித்த அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பொய்யான தகவலை கூறியது தெரியவந்துள்ளது.
Similar News
News January 21, 2026
குமரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஜன.26 அன்று காலை 11மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹5,000 மாறியது

<<18914836>>தங்கம் விலை<<>> ஒரே நாளில் ₹4,120 அதிகரித்த நிலையில், அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. காலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாத நிலையில், பிற்பகலில் 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது, 1 கிராம் வெள்ளி ₹345-க்கும், 1 கிலோ ₹3.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2 நாள்களில் 1 கிலோ வெள்ளி ₹27,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
‘துரந்தர் 2’ பட டீசருக்கு ‘A’ சான்றிதழ்

₹1,000+ கோடி வசூலை ஈட்டி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘துரந்தர்’ படத்தின் 2-ம் பாகம் குறித்த அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என 2-ம் பாகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. 1:48 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் டீசருக்கு CBFC, ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் மார்ச் 19-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. யாருக்கெல்லாம் ‘துரந்தர்’ படம் பிடிச்சிருந்தது?


