News April 19, 2024
வாக்களிக்க சென்றவர்கள் அடுத்தடுத்து மரணம்

திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்த கனகராஜ் (59) என்பவர் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சேலம் அருகே வாக்களிக்க சென்ற சின்னபொண்ணு (77), பழனிசாமி (65) ஆகிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து சில நிமிடங்களில், மேலும் ஒருவர் வாக்குச்சாவடியில் உயிரிழந்தது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News February 10, 2026
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (09.02.2026) தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு, கொத்தடிமை முறையை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதி ஏற்றுக்கொண்டனர்.
News February 10, 2026
‘துணை முதல்வர்’ அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த பாஜக

அதிமுக தலைமையில் அணி அமைத்தாலும், தமிழகத்தில் NDA கூட்டணியின் ஆட்சியே நடக்கும் என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் பேசியிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு துணை முதல்வர் பதவி கூட கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு தகுதியான அளவில் சீட் ஷேரிங் நடக்கும். குறிப்பாக, பாஜகவிற்கு 40 தொகுதிகளை உறுதியாக கேட்டுபெறுவோம் எனவும் கூறி அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.
News February 10, 2026
காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் காலையில் எழுந்ததும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் நாளின் தொடக்கத்தில் வெந்நீர் குடித்து தொடங்குவது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு மிதமான வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.


