News November 6, 2025
டி20ல் வாஷிங்டன் சுந்தர் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தினார். இந்நிலையில், சர்வதேச டி20-யில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையையும் சுந்தர் பெற்றுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், இந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கியுள்ளார். இதன்மூலம் 3 ஃபார்மட்டிலும் தடம் பதிக்கும் ஆல்ரவுண்டராக வாஷி உருவாகி வருகிறார்.
Similar News
News February 4, 2026
2026 தேர்தல்.. ரூட்டை மாற்றிய விஜய்

பிப்ரவரி 2-வது வாரத்தில் வேலூர் அகரம்சேரியில் விஜய் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால், போலீஸ் அனுமதி தராத காரணத்தால் விஜய்யின் பிரசார பயணம் மாற்றப்பட்டுள்ளது. வரும் பிப்.13-ம் தேதி, சேலம் மகுடஞ்சாவடியில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி போலீசில் தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $190 (இந்திய மதிப்பில் ₹17,180) உயர்ந்து $4,990-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 4, 2026
H.ராஜா உடல்நிலை.. முக்கிய அப்டேட்

பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். நல்ல முறையில் H.ராஜாவின் உடல்நலன் முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிவித்த நயினார், வெகுவிரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அவர் மக்கள் பணிக்கு திரும்புவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.


