News November 6, 2025

ஈரோடு: இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

image

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 9 இல் திண்டல் வெள்ளாளர் கல்லூரியில் நடைபெறுகிறது. இதன் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பிளாக் பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும், கண்டிப்பாக ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை பான் கார்டு போன்ற ஏதேனும் ஒன்றை அசலாக கொண்டு வர வேண்டும் 9.30 பிறகு தேர்வு எழுத அனுமதி இல்லை. தேர்வாணையர் சுஜாதா தகவல்.

Similar News

News November 7, 2025

ஈரோடு: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்

image

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 14 பேரை இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கியுள்ளார். அதில், EX.எம்.பி. சத்தியபாமா, ஒன்றிய செயலாளர்கள் தம்பி (எ) சுப்பிரமணியம் (நம்பியூர்), குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்) ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், முன்னாள் யூனியன் சேர்மன்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, எஸ்.எஸ்.ரமேஸ் உள்ளிட்ட 14 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

News November 7, 2025

பவானி: பட்டப்பகலில் துணிகரம்.. தட்டி தூக்கிய போலீஸ்

image

பவானியில் பட்டப் பகலில் பைனான்ஸில் பூட்டை உடைத்து ரூ.55,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக பைனான்ஸ் உரிமையாளர் விவேகானந்தன் போலீசாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் படி, ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் குப்பிபாலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர்களை கைது செய்து, ரூ.55,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!