News November 6, 2025

பேராவூரணி அருகே சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

image

பேராவூரணி அருகே சின்ன ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல் டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், வழியில் மீன் ஏற்றி வந்த மினி லாரி, சுந்தரவடி வேல் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 66 நாள்களில் 2.38 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் டன் நெல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும். இதுவரை 47 ஆயிரத்து 594 விவசாயிகளுக்கு ரூ. 574 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திருமதி.பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

வல்லம் : திருடு போன செல்போன்கள் மீட்பு

image

வல்லம் காவல் நிலையத்தில் செல்போன்கள் திருட்டு போனது மற்றும் காணாமல் போன வழக்குகள் தீவிரமாக ஆராயப்பட்டு 15 செல்போன்களை காவல்துறை மீட்டனர். இதனை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று ( நவ 06 ) வல்லம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து செல்போன்களை பெற்றுக் கொண்டவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

News November 7, 2025

தஞ்சை: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

image

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சினம்பூண்டி சாளுவன்பேட்டைத் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் மனைவி ஜெகதாம்பாள். இவர் வீட்டின் முன்பு தன் பேரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதே தெருவை சேர்ந்த சின்னராசு மகன் ஆனந்த் என்பவர் குடிபோதையில் ஜெகதாம்பாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகதாம்பாள் அளித்த புகாரின் பேரில் ஆனந்தை போலீசார் கைது செய்தார்.

error: Content is protected !!