News November 6, 2025
திண்டுக்கல் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ,சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதை போல் நவ, 6 இன்று “இணையத்தில் உள்ள கடன் செயலி loan app மூலம் கடன் பெறுவது தவிர்ப்போம்”என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர் புகைப்படத்தை ,திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
திண்டுக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

திண்டுக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
நத்தம் அருகே விபத்து! தாய், மகன் பலி…

மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அழகுமீனாள் (50) மற்றும் அவரது மகன் சரவணபாண்டி (24) நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் உள்ள தாயின் வீட்டில் இருந்து திரும்பிய போது, பூதகுடி அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில், அழகுமீனாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சரவணபாண்டி, மருத்துவமனையில் உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
திண்டுக்கல்: நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே (நவம்பர் 6) இன்று நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் முதியவரின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,


