News November 6, 2025
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நவம்பர் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று மாலை படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்தியது. அடுத்த சில மணி நேரத்தில் ஃபஸ்ட் சிங்கிள் அப்டேட்டையும் கொடுத்து படக்குழு திக்கு முக்காட வைத்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜன.9-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இன்று கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
BREAKING: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எனவே, இன்று பணிநேரம் முடிந்ததும் கடை சாவியை டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, நாளை முதல், தமிழகம் முழுவதும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால், நாளை டாஸ்மாக் கடைகள் திட்டமிட்டபடி இயங்காது.
News February 16, 2026
வீட்டுக் கடன் EMI-ல் முக்கியமாக கவனிக்க வேண்டியது..

வீட்டுக்கடன் வாங்கியவர்கள், சிலர் எதிர்பாராத சந்தர்ப்பங்களில், அதன் EMI கட்ட முடியாத சூழலில் சிக்கி கொள்வார்கள். 3 தவணைகள் அல்லது 90 நாள்களுக்கு மேல் EMI கட்டாமல் இருந்தால், வங்கியே அதை வாராக்கடனாக மாற்றி, கடனை வசூலிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிடும். முதல் EMI தவறியதிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகே வீடு ஏலத்துக்கு வரும். அதற்குமுன் எப்போது வேண்டுமானாலும் ஒருவர் அவரின் வீட்டை மீட்கலாம்.
News February 16, 2026
நடிகர் ஏமாற்றிவிட்டார்.. பிரபல தமிழ் நடிகை வேதனை

ஏற்கெனவே நிச்சயதார்த்தம் ஆனதை மறைத்துவிட்டு தன்னை ஒரு மலையாள நடிகர் ஏமாற்றிவிட்டதாக நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்த நேரத்தில், ஒரு நடிகர் டேட்டிங்கிற்கு அழைத்தாராம். அப்போது தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக வாழ நினைத்த அவர், அந்த ரிலேஷன்ஷிப்பில் இறங்கியுள்ளார். பிறகு அந்நடிகரை பற்றிய உண்மை தெரியவந்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் அவர் பேசியுள்ளார்.


