News November 6, 2025

FLASH: விலை ஒரே அடியாக ₹2,000 உயர்ந்தது

image

<<18217339>>தங்கம்<<>> விலையைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு காலையில் ₹1,000 அதிகரித்திருந்தது. இந்நிலையில், மாலையில் மேலும் ₹1,000 உயர்ந்து நடுத்தர மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் வெள்ளி ₹165-க்கும், 1 கிலோ ₹1.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News February 9, 2026

ஒரு நிமிடம் போதும்.. வேலை அழுத்தத்தை குறைக்கலாம்!

image

அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களா? வேகஸ் நரம்பை தூண்டுவதன் மூலம், இந்த மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்கு நீங்கள், மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்கவும். இடைநிறுத்தி மீண்டும் மூச்சை உள்ளிழுக்கவும். பின்னர் மெதுவாக வாய் வழியாக மூச்சை வெளியேவிடவும். இதை 4-5 முறை செய்தால், மன அழுத்தம் குறையும்.

News February 9, 2026

சற்றுமுன்: விஜய் அவசர அறிவிப்பு

image

தவெக மா.செ.,க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக விஜய் திடீரென அறிவித்துள்ளார். நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெற உள்ள ஆலோசனையில், மா.செ.,க்களுடன் விஜய் தனித்தனியே பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு தொகுதியிலும் தவெகவுக்கு உள்ள பலம் மற்றும் பலவீனம் குறித்து அவர் கேட்டு தெரிந்துகொள்ள உள்ளாராம். மேலும், தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பான அறிவுரைகளையும் விஜய் வழங்க உள்ளார்.

News February 9, 2026

வருங்கால சந்ததியினருக்கான நார்வேயின் சூப்பர் பிளான்!

image

1969-ல் வட கடலில் கண்டுபிடிக்கப்பட்ட கச்சா எண்ணெய் வளத்தை நார்வே மிகவும் வித்தியாசமாக பயன்படுத்தியுள்ளது. எண்ணெய் வருமானத்தை செலவழிக்காமல், வருங்கால சந்ததியினருக்காக சேமித்து, அதை உலகெங்கிலும் முதலீடு செய்வதற்காக Government Pension Fund Global என்ற நிதி நிறுவனத்தை உருவாக்கியது. இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு ₹180 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிதி ஓய்வூதிய செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

error: Content is protected !!