News November 6, 2025
விருதுநகர்: ரூ.5 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! APPLY பண்ணுங்க

விருதுநகர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 12, 2026
BREAKING விருதுநகர்: பட்டாசு ஆலையில் தீ விபத்து

வெம்பக்கோட்டை அருகே தெற்கு ஆணைக்குட்டம் பகுதியில் ஐயப்பா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பட்டாசு கழிவுகளை கொளுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சத்யாநகரை சேர்ந்த யேசுராஜ் (34) என்ற தொழிலாளி படுகாயமடைந்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை.
News February 12, 2026
விருதுநகர்: இனி எல்லா ஆதார் சேவையும் இங்கே!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 12, 2026
சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை

சிவகாசி ராஜதுரை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(45). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் யுவஸ்ரீ (18). தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்வில் யுவஸ்ரீ குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதை ராதாகிருஷ்ணன் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி யுவஸ்ரீ வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.


