News April 19, 2024
ஜனநாயகத்தை காப்பதற்கான யுத்தம் தொடக்கம்

நாட்டில் ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான யுத்தம் இன்று தொடங்கியிருப்பதாக கார்கே தெரிவித்துள்ளார். அவரின் X பக்க பதிவில், மக்களவைக்கு முதல்கட்டத் தேர்தல் தொடங்கியுள்ளதாகவும், இதில் மிகவும் கவனமுடன் வாக்காளர்கள் வாக்கைப் பதிவு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் விதியை தீர்மானிக்கும் சக்தி வாக்குகளில் உள்ளதை உணர்ந்து வாக்களிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 19, 2025
INDIA கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்., தலைவர் கார்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
News August 19, 2025
1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, பாம்பன், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில், இன்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
CM-ஐ சந்திக்கும் நயினார்.. ஏன் தெரியுமா?

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு CM ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளை தாண்டி அனைவரும் ஆதரித்தோம் என வரலாற்றில் பேசப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.