News November 6, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 6, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர்

டிஎன்யுஎஸ்ஆர்பி நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு வருகிற 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1542 ஆண்கள் மற்றும் 570 பெண்கள் என மொத்தம் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏவிசி கலைக்கல்லூரியில் ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பெண் விண்ணப்பதாரர்கள் என இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
News November 6, 2025
மயிலாடுதுறை: மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடியில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் தங்கம் விடுதியில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ சார்ந்தவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் மாணவர் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
News November 6, 2025
மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சி பெற்ற தரங்கம்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருந்து இருப்புகள் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.


