News November 6, 2025
அரியலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

அரியலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 6, 2025
அரியலூர்: நூலகத்தினை ஆய்வு செய்த எம்எல்ஏ

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட திறக்கப்பட்ட கிளை நூலக கட்டிடத்தினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதில் பயின்று வரும் மாணவ மாணவிகளிடம் நூலகம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார். இதில் நூலக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் மாணவர்கள் வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
News November 6, 2025
அரியலூர்: கல்வி உதவிதொகை வேண்டுமா?

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவிதொகை திட்டத்தில், OBC, EBC, DNT பிரிவை சேர்ந்த பட்டியலிடப்பட்ட (டாப் கிளாஸ் ஸ்கூல்ஸ்) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களை Scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 6, 2025
அரியலூர்: சட்ட உதவி பாதுகாப்பு மையம் துவக்கம்

அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அரியலூரில் உள்ள பல்துறை வளாகத்தில் நவம்பர் 5-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இதில் அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர் வாலண்டினா கலந்துகொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


