News November 6, 2025
இந்த வார OTT விருந்து மெனு இதோ!

வரும் நவம்பர் 7-ம் தேதி, மக்களுக்கு OTT-யில் பெரிய ட்ரீட் தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி, ஆங்கிலம், கொரியன் என பல மொழிப் படங்களும், வெப் சீரிஸும் ரிலீஸாக உள்ளன. அது என்னென்ன படங்கள் என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்யவும். நீங்கள் இதில் எந்த படத்தை முதலில் பாக்க போறீங்க?
Similar News
News November 6, 2025
விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய்தான் CM வேட்பாளர் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நிச்சயம் தவெக தங்கள் கூட்டணிக்கு வரும் என அதிமுக நம்புகிறது. இந்நிலையில், தவெக உடனான கூட்டணி குறித்து வெளிப்படையாகவா பேச முடியும் என RB உதயகுமார் கேட்டுள்ளார். நடக்க வேண்டிய நேரத்தில், TN மக்களுக்கு நன்மை தரும் வகையில் அது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக + தவெக கூட்டணி உறுதியாகுமா?
News November 6, 2025
பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தினால் என்ன ஆகும்?

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. தாய் அருந்தும் மது ரத்தத்தின் வழியாக பாலில் கலக்குமாம். அந்த பாலை குழந்தைகள் அருந்தும்போது, அவர்கள் உடலிலும் மது கலக்கிறது. குழந்தைகளின் கல்லீரல் மிகவும் மென்மையானது என்பதால், மதுவை அவர்களது உடலால் சுத்திகரிக்க முடியாது. இதனால் குழந்தைகளில் மூளை வளர்ச்சி, கல்லீரல் செயல்பாடு பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE பண்ணுங்க.
News November 6, 2025
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி போராட்டம்

சமூகத்தை சீரழிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளதாக கூறி, அதனை தடை செய்ய வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் பலமுறை வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி, வரும் 9-ம் தேதி தனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


