News November 6, 2025
கோவை மாணவி வன்கொடுமை: 59 இடங்களில் தீவிர ரோந்து!

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கோவை மாநகரில் உள்ள 59 வெறிச்சோடிய இடங்களை போலீசார் அடையாளம் கண்டு கண்காணிப்பு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, மாலை மற்றும் இரவு நேரங்களில் இவ்விடங்களில் ரோந்து அதிகரிக்க, அதிகாரிகள் டார்ச், சைரன், தடியுடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News March 10, 2026
கோவை: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
கோவை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

கோவை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News March 10, 2026
மருதமலை கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு!

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (10.03.2026) முதல் செல்போன் பயன்படுத்த கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜகோபுரம் முதல் அனைத்து சன்னதிகள் மற்றும் வளாகம் முழுவதும் செல்போனில் பேசவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. பக்தர்கள் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, அமைதியான முறையில் தரிசனம் செய்ய ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


