News November 6, 2025

BREAKING: விடுமுறை… நாளை முதல் முக்கிய அறிவிப்பு

image

வார விடுமுறையில் மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சுமார் 1,000 சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(நவ.7) முதல் 9-ம் தேதி வரை சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். SHARE IT.

Similar News

News November 6, 2025

மாணவி மீது விமர்சனம்: கொதித்தெழுந்த பேரரசு

image

கோவையில் ஆண் நண்பருடன் வெளியே சென்ற கல்லூரி மாணவி மூவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனிடையே, அப்பெண்ணின் நடத்தையை விமர்சிக்கும் வகையில் சிலர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் உங்கள் பெண்ணுக்கு இதுபோன்று நடந்தால் இப்படி பேசுவீர்களா என இயக்குநர் பேரரசு ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண் தனியாக சென்றால் பாலியல் வன்கொடுமை செய்வீர்களா என்றும் கேட்டுள்ளார்.

News November 6, 2025

நேர்மையாக தேர்தல் நடந்தால், NDA இருக்காது: பிரியங்கா

image

பிஹார் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், கோவிந்த்கஞ்ச் பகுதியில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். இதில் பேசிய அவர், பிஹார் தேர்தல் நேர்மையாக நடந்தால், NDA ஆட்சி தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார். வளர்ச்சியை விட மதத்திற்கே பாஜக முன்னுரிமை அளிப்பதாக விமர்சித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் பிஹாரில் 27 பாலங்கள் இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டினார்.

News November 6, 2025

நாளையுடன் முடிகிறது… உடனே இதை பண்ணுங்க

image

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை அப்லோடு செய்ய நாளையே(நவ.7) கடைசி நாள் என TNPSC தெரிவித்துள்ளது. நாளை சான்றிதழ்களை அப்லோடு செய்யாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல பரிசீலிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<> https://apply.tnpscexams.in <<>>இணையதளத்தில் தேர்வர்களின் OTR மூலம் மட்டுமே சான்றிதழ்களை அப்லோடு செய்ய முடியும். உடனே பண்ணுங்க நண்பர்களே!

error: Content is protected !!