News November 6, 2025
RAIN ALERT: 19 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது!

பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், தி.மலையில் இடியுடன் மழையும், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News February 20, 2026
BREAKING: காய்கறிகளின் விலை குறைந்தது

தக்காளி இல்லாமல் சமையலா என்றால், நிச்சயம் முடியாது என்பதே பதிலாக இருக்கும். அந்த தக்காளி சமீபமாக அதிகரித்த நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் குறைந்துள்ளது. 15 கிலோ கொண்ட பெட்டி ₹150 – ₹250 வரை விற்பனையாவதால், 1 கிலோ தக்காளி ₹10 – ₹15 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஊட்டி கேரட்டும் 1 கிலோ ₹15 – ₹20 வரையே விற்கப்படுகிறது. இது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
News February 20, 2026
Tea-ஐ மீண்டும் சூடுபடுத்தி குடிக்கிறீங்களா? DANGER!

பொதுவாக டீ மீதமிருந்தால் அதனை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது வழக்கம். ஆனால், இதை செய்வதால் உடல்நலத்திற்கு பல தீங்குகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதனால், டீ-ல் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சி அதிகரிக்கக்கூடும், டானின் அளவு அதிகரித்து இரும்புச்சத்தை உறிஞ்ச உடல் சிரமப்படும், செரிமானப் பிரச்னைகள், ஊட்டச்சத்து ஏற்படலாம். எனவே, தேவையான அளவில் டீ போட்டு குடிங்க மக்களே. SHARE.
News February 20, 2026
அதிமுக கூட்டணிக்கு 3-வது இடம் தான்: மாணிக்கம் தாகூர்

மக்கள் NDA கூட்டணியை நிராகரித்துவிட்டதாகவும், இந்த தேர்தலில் அதிமுக – பாஜக போட்டியிலேயே இல்லையென்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். சிவகாசியில் பேசிய அவர், எழுதி வச்சிக்கோங்க… அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் 3-வது இடம் தான் வரும். அக்கூட்டணி 18-20% வாக்குகள் மட்டுமே பெறும் என்று கூறிய அவர், அண்ணாமலை தொடங்கி பாஜக தலைவர்கள் பலர் தேர்தலில் நிற்காமல் ஓடுவார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.


