News November 6, 2025
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

திருப்பூர் மக்களே, வீடுகள் வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
Similar News
News March 10, 2026
திருப்பூர்: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News March 10, 2026
உடுமலை அருகே கொத்தாக அதிமுகவில் ஐக்கியம்

உடுமலை குறுஞ்சேரி ஊராட்சியில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.
News March 10, 2026
திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <


