News April 19, 2024
கூடுதல் நேரம் கொடுக்க வாய்ப்பில்லை

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க கூடுதல் நேரம் கொடுக்க வாய்ப்பில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாலை 6 மணிக்கு முன்பு எத்தனை நபர்கள் வந்தாலும் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், அதன்பின் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், தேர்தலை புறக்கணிக்காமல் அனைவரும் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Similar News
News May 7, 2025
மே 1: வரலாற்றில் இன்று

*உழைப்பாளர் தினம். *1971 – அஜித்குமார் பிறந்தநாள். *1930 – புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. *1776 – இல்லுமினாட்டி குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. *1840 – உலகின் முதலாவது அதிகாரப்பூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. *1988 – அனுஷ்கா சர்மா பிறந்தநாள். *1980 – நடிகை ஷோபா நினைவுநாள்.
News May 7, 2025
CM-க்கு கூச்சமாக இல்லையா? அண்ணாமலை கடும் தாக்கு

வேறுவழியின்றி சாராய அமைச்சரை பதவி நீக்கம் செய்திருக்கிறீர்கள், பதிலுக்கு, ஆவின் பால் கொழுப்பில் கூட ஊழல் செய்யலாம் என கண்டுபிடித்தவருக்கு மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்க்கிறீர்கள் என CM ஸ்டாலினை அண்ணாமலை விமர்சித்துள்ளார். கொலை, கொள்ளைச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், தனிநபர் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் என எளிதாக கடந்து செல்ல CM-க்கு கூச்சமாக இல்லையா என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
News May 7, 2025
2 ஆண்டுகளுக்குப் பிறகு சஹால் படைத்த சாதனை

CSK – PBKS இடையிலான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் 18-வது ஓவரில் தீபக் ஹூடா, கம்போஜ், நூர் அகமது என ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார் யுஜ்வேந்திர சஹால். இவ்வாறு 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முன்னதாக, 2022-ல் KKR-க்கு எதிரான ஆட்டத்தில் RR அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாஹல் கைப்பற்றியதன் மூலம் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் பெற்ற பட்டியலில் உள்ளார்.