News November 6, 2025
திமுக, தவெக இடையேதான் போட்டி: டிடிவி

NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என TTV தெரிவித்துள்ளார். 2026-ல் DMK- TVK இடையேதான் போட்டி. ஆனால், அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது எனக் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் அடுத்த தேர்தலில் ADMK 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் EPS என்ற துரோக சக்தியை அமமுக வீழ்த்தும் எனவும் சூளுரைத்துள்ளார்.
Similar News
News November 6, 2025
ரொட்டி (பிஹார்) கருகிவிடும்: லாலு பிரசாத் யாதவ்

பிஹாரில் 20 ஆண்டு நிதிஷ் ஆட்சியை ரொட்டியுடன் லாலு பிரசாத் யாதவ் ஒப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரொட்டியை திருப்பி போடவில்லை என்றால் கருகிவிடும். அதுபோல, 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலம், எனவே ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், புதிய பிஹாரை உருவாக்க இளைஞர்கள் (தேஜஸ்வி) கையில் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
₹2,708 கோடியை அள்ளி கொடுத்த ஷிவ் நாடார்

இந்தியாவில் நடப்பாண்டில் அதிக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்களின் பட்டியலை EdelGive Hurun வெளியிட்டுள்ளது. இதில், ₹2,708 கோடி நன்கொடை வழங்கி ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். நாளொன்றுக்கு சராசரியாக ₹7.4 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கல்வி, கலை, கலாசார துறைகளில் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக, முகேஷ் அம்பானி ₹626 கோடி, பஜாஜ் குடும்பம் ₹446 கோடி வழங்கியுள்ளனர்.
News November 6, 2025
பிஹாரில் வாக்குப்பதிவு நிறைவு

பிஹாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதிகபட்சமாக பெகுசராய் தொகுதியில் 67.32%, குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.


