News April 19, 2024
தருமபுரி: பரிவட்டம் கட்டி வரவேற்பு

மக்களவை பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை தருமபுரி எஸ்வி ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல்முறை ஓட்டுபோட வந்த பெண் ஒருவருக்கு டிஆர்ஓ பால் பிரின்சிலி ராஜ்குமார் பரிவட்டம் கட்டி வரவேற்றார்.
Similar News
News August 24, 2025
தர்மபுரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; முதல்வர் கைது

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வரும் வினுலோகேஸ்வரன், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் கூற, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினுலோகேஸ்வரனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News August 24, 2025
ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

ஒகேனக்கலில் சில நாட்களாக விநாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் நீா்வரத்து இருந்ததால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 9500 கனஅடியாக குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
News August 24, 2025
டிராக்டரில் சென்றவர் உயிரிழப்பு

காரிமங்கலம் அடுத்த திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி திப்பம்பட்டி சாலையில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே சின்னசாமி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.