News November 6, 2025
BREAKING: கட்சி பதவி பறிப்பு.. ஸ்டாலின் அதிரடி

சென்னையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும். தோல்வி அடைந்தால், மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தல் பணியை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டில் இதற்கு ₹10,000 கோடி

இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்த ‘பயோ ஃபார்மா சக்தி’ திட்டத்தை FM நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முன்மொழிந்தார். இத்திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், விலை உயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதுடன், அவை பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.
News February 2, 2026
ஜிஎஸ்டி வசூல் ₹1.93 லட்சம் கோடி

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி ₹1.93 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஆண்டு ஜனவரி மாதம் ₹1.84 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு 6.2% அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் ₹1.41 லட்சம் கோடி என்றும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 5% உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
ஏமாற்றமளிக்கும் மத்திய பட்ஜெட்: திருமாவளவன்

FM தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்கு பதில் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என திருமா கூறியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை என சாடியுள்ள அவர், தனிநபர் வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை என்றும் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் TN-ஐ மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.


