News November 6, 2025
BREAKING: கோவை குற்றாலம் நாளை முதல் திறப்பு

கோவை குற்றாலம் வெள்ளப்பெருக்கால் மூடப்பட்டிருந்த நிலையில், மழைப்பொழிவு குறைந்ததுடன் நீர்வரத்தும் சீராகி இருப்பதால், நாளை (நவ.7) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 22 அன்று தொடர் மழையால் மூடப்பட்ட இத்தலம், 15 நாட்களுக்குப் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நாளை அனுமதிக்கப்படுகிறது.
Similar News
News February 3, 2026
BREAKING: காரமடையில் யானை தாக்கி ஒருவர் பலி

காரமடை அடுத்துள்ள பில்லூர் அணையை சுற்றிலும் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் நள்ளிரவு பரளிக்காடு கிராமத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்ட முற்பட்டுள்ளனர். அப்போது, ஆக்ரோஷமான யானை தாக்கியதில் சிவக்குமார்(45) என்ற பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 3, 2026
கோவை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

கோவை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News February 3, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


