News November 6, 2025
வேலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகிற நவம்பர் 15-ம் தேதிக்குள் வேளாண் அடுக்கக அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி.எம்.கிசான் தொகையை தொடர்ந்து பெற முடியும். எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக ஆதார் கார்டு, சிட்டா ஆகியவற்றுடன் அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2026
வேலூரில் இன்று செல்லவேண்டிய முக்கிய கோயில்!

வேலூர் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே, வேலூர் ஜலகண்டேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை இதுவே ஆகும். இங்குள்ள மூலவர் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும், ஜலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, இங்கு சென்று வழிபட்டால் ஆயுள் விருத்தி பெரும், விபத்து பயம் நீங்கும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
வேலூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News February 14, 2026
வேலூரில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <


