News November 6, 2025
டிரம்ப் – மோடி அடிக்கடி பேசுகின்றனர்: USA White House

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், PM மோடியும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளின் வர்த்தக குழுக்களும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டார். டிரம்ப், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News February 15, 2026
அமைச்சர் ராஜகண்ணப்பன் ராஜினாமா?

அமைச்சர் ராஜகண்ணப்பனை ராஜினாமா செய்யக்கோரி தலைமை கூறியதாக SM-ல் கருத்து பரவி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில், அப்படி எதுவும் அறிவுறுத்தப்படவில்லை என அமைச்சர் தரப்பில் கூறியுள்ளனர். <<19097090>>கூட்டணி, தேர்தலில் திமுக போட்டி<<>> குறித்து ராஜகண்ணப்பன் பேசியதும், அதற்கு காங்., <<19139216>>MP மாணிக்கம் தாகூர் பதிலடி<<>> கொடுத்ததும் பெரும் சர்ச்சையானது. அதனால் ராஜகண்ணப்பனை நேற்று அவசரமாக தலைமை அழைத்துப் பேசியதாக தெரிகிறது.
News February 15, 2026
மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய 4 கால பூஜை மந்திரம்

சிவராத்திரியின் 4 கால பூஜையில் ஈசனுக்கு இந்த மந்திரத்தை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். அதன்படி, முதல் கால பூஜையில் (இரவு 7:30 மணி) ‘ஓம் அம்பலத்தாடியே போற்றி ஓம்’ *2-ம் கால பூஜையில் (இரவு 10:30 மணி) ‘ஓம் ஈசனே போற்றி போற்றி’ *3ம் கால பூஜையில் (இரவு 12:00 மணி) ‘ஓம் கயிலை நாதனே போற்றி போற்றி’ *4ம் கால பூஜையில்(அதிகாலை 4:00 மணி) ‘ஓம் சிவ சிவ போற்றி ஓம்’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
News February 15, 2026
5 பேரின் உயிரை காப்பாற்றிய குழந்தைக்கு அரசு மரியாதை!

5 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைக்க காரணமாக இருந்த 10 மாத பிஞ்சு குழந்தையின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த <<19137327>>அலின் ஷெரின் ஆபிரஹாம்<<>> என்ற குழந்தையின் கல்லீரல், கிட்னி, கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று நடக்கும் குழந்தையின் இறுதிச்சடங்கில் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அரசு மரியாதை செலுத்த உள்ளது.


