News November 6, 2025
ராணிப்பேட்டை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

ராணிப்பேட்டை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 6, 2025
ராணிப்பேட்டை: அபாயகரமான வேகத்தடைக்கு தீர்வு!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து வேக தடைகளின் மீது வெள்ளை பெயிண்ட் இல்லாததால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இதனால் இன்று (நவ.06) அப்பகுதியில் நெடுஞ்சாலை பணியாளர்கள் வேகத்தடைக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 6, 2025
ராணிப்பேட்டை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
ராணிப்பேட்டை பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், உடனை புகார் அளிக்கவும் உருவாக்கப்பட்ட காவல் உதவி கைபேசி செயலி பதிவிறக்கம் செய்ய குறியீட்டினை ஸ்கேன் செய்யவும் என அறிவுறுத்தப்பட்டது. பின் செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள். என்று மாவட்ட காவல்துறை செய்தியில் வெளியிட்டுள்ளது.


