News November 6, 2025
பெரம்பலூர்: குட்கா விற்பனை – ஒருவர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஷ் (25) என்பவரின் வீட்டில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை, சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில், போலீசார் வெங்கடேஷை கைது செய்து, அவரிடமிருந்து 106.822 கி.கி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 8, 2026
பெரம்பலூர்: மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் எனவும் மின்செயர் பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 8, 2026
பெரம்பலூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

பெரம்பலூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
News February 8, 2026
பெரம்பலூரில் வேலைவாய்ப்பு – கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க, மாவட்ட மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் 06 வட்டாரங்களில், காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருகிற பிப்.16ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மேலாண்மை அலகு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க!


