News April 19, 2024

திருவள்ளூரில் வாக்களிக்கச் சென்றவர் மரணம்

image

மக்களவைத் தேர்தல் 2024 முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கனராஜ் என்பவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் சென்றார். அப்போது அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News February 2, 2026

கும்மிடிப்பூண்டியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே நேற்று(பிப்.1) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, ரூ.3 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், முகமது நயிம் ஆகியோரை கைது செய்தனர்.

News February 2, 2026

திருவள்ளூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திருவள்ளூரில் 4 பேர் மீது குண்டாஸ்!

image

மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(32) தனது நண்பர்களான சுகுமார்(31), கேசவ மூர்த்தி(25) ஆகியோருடன் கடந்த ஜன.16ஆம் தேதி ஆந்திரா மாநிலம், கோனே நீர் வீழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பினர். அப்போது கஞ்சா போதை கும்பலுடன் ஏற்பட்ட தகராறில், பார்த்திபன், சுகுமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட ஜவகர்(24), வினோத்(36), ஜோதிஷ்(34), நீலகண்டன்(31) ஆகியோர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

error: Content is protected !!