News November 6, 2025

கூட்டநெரிசல் மரணங்களால் தான் RCB விற்கப்படுகிறதா?

image

18 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின், கோப்பையை வென்ற RCB விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வெற்றி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த கூட்டநெரிசல் மரணங்கள் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே, RCB அணியின் உரிமம் கைமாற்றிவிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிர்சனை இருப்பினும், RCB அணியை வாங்க பலமுனை போட்டி நிலவுகிறதாம்.

Similar News

News February 20, 2026

உங்களுக்கு PM KISAN பணம் வருமா?.. செக் பண்ணுங்க!

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) அடுத்த வாரம் (அ) மார்ச் முதல் வாரத்தில் மத்திய அரசு விடுவிக்கும் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்பதை ஆன்லைனில் அறியலாம். pmkisan.gov.in இணையதளம் சென்று, Beneficiary List ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதன்பின், விவரங்களை உள்ளிட்டு Get Report பட்டனை கிளிக் செய்தால் பயனாளிகளின் பட்டியல் வெளியாகும். SHARE

News February 20, 2026

முட்டை விலை சரசரவென சரிந்தது

image

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாள்களாக முட்டை கொள்முதல் விலை ₹5.40 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை கொள்முதல் விலை ₹5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை சரிந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். உங்க ஊரில் முட்டை விலை என்ன?

News February 20, 2026

ஒரே மேடையேறும் திமுக கூட்டணித் தலைவர்கள்

image

மதுரையில் நாளை கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் நேற்று இணைந்தது. இதனையடுத்து திமுக கூட்டணி வலுவாக இருப்பதை காட்ட வேண்டும் என்பதற்காக, மு.க.ஸ்டாலின், பிரேமலதா, திருமா, செல்வப்பெருந்தகை, வைகோ, பெ.சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் நாளை ஒரே மேடையில் ஏறவுள்ளனர்.

error: Content is protected !!