News April 19, 2024
2ஆவது முறையாக இயந்திரம் கோளாறு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விண்ணமங்கலம் 74வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு, வாக்கு பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்காளர்கள் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
Similar News
News December 4, 2025
திருப்பத்தூர்: கட்டிய கணவனை தாக்கிய மனைவி!

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் நேற்று (டிச.3) இவரது வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் கண்ணனை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கண்ணன் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 3, 2025
பள்ளத்தூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று ( டிச-3) ஊராட்சி மன்ற தலைவர் கே. சி. ராணி சின்னக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், ஆடுகளுக்கும் பசு மற்றும் எருமை கன்றுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. திமுக கந்திலி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
News December 3, 2025
1531 புத்தகங்கள் விற்பனை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றது. 4-ஆம் நாளான நேற்று (டிச.02) 1531 புத்தகங்கள்,1,94,057 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. என மாவட்ட நிர்வாகம் இன்று (டிச-03) அறிவித்துள்ளது. ஆறாம் நாளான நாளை வழக்கறிஞா் மணிமொழி, மற்றும் சமூக செயற்பாட்டாளர் மதிவதனி பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளனர்.


