News November 6, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

கடந்த 2 நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹90,000-க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, நம்மூரிலும் உயர்ந்துள்ளது.

Similar News

News February 1, 2026

BUDGET 2026: மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம்

image

மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறையில், ‘மகாத்மா காந்தி கிராம சுராஜ்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராமப்புற கைவினை கலைஞர்கள், கைத்தறி நெசவாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் FM நிர்மலா தெரிவித்துள்ளார். முன்னதாக, 100 நாள் வேலை திட்டத்தில்(MGNREGA) மகாத்மா காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியதால் சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது அவரது பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

செமி கண்டக்டர் மிஷன் 2.0 திட்டத்துக்கு ₹40,000 கோடி

image

இந்தியாவை உலகளாவிய உயிரி மருந்து உற்பத்தி மையமாக மேம்படுத்த, ‘பயோ பார்மா சக்தி’ திட்டத்தை அறிமுகப்படுத்தி ₹10,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார் FM நிர்மலா சீதாராமன். இது உயிரியல் மற்றும் உயிரி மருந்துகளின் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்யும் சூழலை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், Semi Conductor Mission 2.0-வுக்காக ₹40,000 கோடியை அவர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

News February 1, 2026

சிகரெட் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது

image

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 40% GST வரி உயர்வுடன் சிகரெட், பான் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, சாதாரண சிகரெட்​ (65 mm) ₹2.10, Medium சிகரெட்​ (70mm) ₹4, பிரீமி​யம் சிகரெட் (75 mm) ₹5.40 வரை விலை உயர்ந்து விற்பனையாகலாம் என கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் புகை பிடிப்போர் கலக்கம் அடைந்துள்ளனர். (ADVISORY: சிகரெட் புகைக்காதீர்)

error: Content is protected !!