News November 6, 2025
விரைவில் அரசியலில் மாற்றம்: அன்புமணி

தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தேர்தலின்போது பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றிபெறலாம் என கணக்குப்போடும் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்; 2026-ல் திமுக தோற்கடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அன்புமணியின் இந்த பேச்சு மூலம் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 28, 2026
திருக்குறளை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி முர்மு

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி முர்மு திருக்குறளை மேற்கோள்காட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. திருவள்ளுவர் கூறுவது போல், எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், விவசாயத்தை சார்ந்துதான் இருக்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும், இந்த ஆட்சியில் உணவுப் பொருள் இறக்குமதியை குறைக்க, எண்ணெய் பயிர்கள் உற்பத்திக்கான தேசிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News January 28, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 28, 2026
25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: முர்மு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்நாள் நிகழ்வில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசியுள்ளார் முர்மு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமானோர், இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றிருப்பதாக கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 10 வருடங்களில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


