News November 6, 2025

சென்னை: பைக் ரேஸ்-பேன்சி கடை ஓனர் பரிதாப பலி!

image

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் நேற்று இரவு சோயல் மற்றும் சுகைல் ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் பைக்ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எதிர்திசையில் குமரன் என்பவர் தனது பேன்சி கடையை மூடி விட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அவர் மீது மோதியதில், சுகைல் & குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 6, 2025

25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் வழங்கும் தமிழக அரசு

image

சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. தேவஸ்தானம் கேட்டு கொண்டதால் வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும். தமிழக பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசின் துணையோடு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் அதற்கான ஏற்பாடுகாளை இந்து சமய அறைநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.

News November 6, 2025

சென்னை: 3 மாத குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

image

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர் – வினிஷா தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 4-வதாக மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஸ்ரீதர்-வினிஷா தம்பதியினர் குழந்தையை தரகர்கள் மூலமாக ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். தகவலறிந்த குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் 3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!