News November 6, 2025
மதுரை: பள்ளி மாணவி சுருண்டு விழுந்து பலி

மதுரை அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் ஆஷிகா(14). இவர் செக்கானூரணி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 10, 2026
மதுரை: செல்லூரில் ஒருவர் வெட்டிக் கொலை

மதுரை, செல்லூரை சேர்ந்த செல்லத்துரை (49), திருட்டு மற்றும் தகராறு வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவு செல்லூர் ஜீவா ரோடு பகுதியில் மர்ம கும்பலால் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News February 10, 2026
மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

மதுரை மாவட்டத்தில் இன்று (09.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.